/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடை திறப்பு எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
ரேஷன் கடை திறப்பு எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : செப் 27, 2025 12:02 AM

நெய்வேலி : நெய்வேலி தொகுதியில் ரேஷன் கடைகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
நெய்வேலி தொகுதிக்குட்பட்ட கீழ்மாம்பட்டு ஊராட்சியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைக்க சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அடிக்கல் நாட்டினார்.
கீழக்கொல்லை கிராமம் மற்றும் மருங்கூர் ஊராட்சியில் ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினார்.
தொடர்ந்து, கீழ்காங்கிருப்பு அரசு நடுநிலைப் பள்ளியில் அவரது தலைமையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. பண்ருட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் சபா பாலமுருகன் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில், 15 அரசு துறை அதிகாரிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.