/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முகவர்கள் கூட்டம் எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
முகவர்கள் கூட்டம் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஏப் 07, 2025 04:49 AM

நெய்வேலி : நெய்வேலி தொகுதிக்கான ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம் நடந்தது.
நெய்வேலி தொகுதிக்குட்பட்ட கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், புலியூர், சமட்டிகுப்பம், அழகப்பசமுத்திரம், அரசடிக்குப்பம், வேகாக்கொல்லை ஆகிய ஊராட்சியில் உள்ள ஓட்டுச்சாவடி பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் அடுத்த சத்திரம் கிராமத்தில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். நெய்வேலி தொகுதி பார்வையாளர் இளையராஜா முன்னிலை வகித்தார்.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., '2026 சட்டசபை தேர்தலில் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பேசினார்.
ஒன்றிய தலைவர் வீரராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, மாவட்ட பிரதிநிதிகள் வெங்கடேசன், கோவிந்தராஜ், சீனிவாசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய துணை செயலாளர்கள் ஏழுமலை, ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.