/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.எல்.ஏ.,வின் மாமனார் பஸ் மோதி காயம்
/
எம்.எல்.ஏ.,வின் மாமனார் பஸ் மோதி காயம்
ADDED : ஆக 16, 2025 03:30 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே பு வனகிரி தொகுதி எம்.எல். ஏ.,வின் மாமனார் சாலை விபத்தில் காயமடைந்தார்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 78; இவர் தனது மொபட்டில் நேற்று முன்தினம் பெண்ணாடத்தில் இருந்து விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் வெண்கரும்பூர் சென்று கொண்டிருந்தார்.
வெண்கரும்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு டவுன் பஸ், மொபட் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த செல்வராஜை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின்பேரில், பெண் ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
படுகாயமடைந்த செல்வராஜ், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவனின் எம்.எல்.ஏ.,வின் மாமனார் ஆவார்.