/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மொபைல்' சாராயக்கடை குடி பிரியர்களுக்காக ஏற்பாடு
/
'மொபைல்' சாராயக்கடை குடி பிரியர்களுக்காக ஏற்பாடு
ADDED : டிச 04, 2024 06:17 AM

நெல்லிக்குப்பம்: பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், நெல்லிக்குப்பத்தையொட்டிய புதுச்சேரி மாநில எல்லையில், குடி மகன்களுக்கு வசதியாக, மொபைல் சாராயக்கடை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு அருகே பெண்ணையாற்றில், புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட மணல்திட்டில் புதுச்சேரி மாநில சாராயக்கடை செயல்பட்டு வருகிறது. தமிழக பகுதி குடிபிரியர்களை நம்பியே வைத்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், சாராயக்கடை நடத்த முடியவில்லை.
இதனால் அருகிலேயே இரண்டு மாநிலத்தையும் இணைக்க கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அருகே, மொபைல் சாராயக்கடை ஏற்பாடு செய்து, விற்பனை செய்யப்பட்டது. ஒரு சரக்கு வாகனத்தில் பிளாஸ்டிக் கேன்களில் சாராயத்தை எடுத்து வந்து மொபைல் சர்வீஸ் மூலம் விற்பனை செய்தனர்.
மழை பாதிப்பு அதிகம் இருந்தாலும் அதைபற்றி கவலைபடாமல் காலை 6:00 மணிக்கே குடிபிரியர்கள், அதிக அளவில் திரண்டதால், விற்பனை செய்யாமல் திணறினர்.