தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தீப்பிடித்து எரிந்த மொபைல் போன் விருத்தாசலத்தில் பரபரப்பு

 தீப்பிடித்து எரிந்த மொபைல் போன் விருத்தாசலத்தில் பரபரப்பு

 தீப்பிடித்து எரிந்த மொபைல் போன் விருத்தாசலத்தில் பரபரப்பு


ADDED : மார் 01, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வாலிபரின் மொபைல்போன் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலத்தில், கடலுார் சாலையில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட போலீசார் பணியில் இருந்தனர். மாலை 4:30 மணியளவில், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் விசாரணைக்கு வந்தார்.

அப்போது, சட்டைப்பையில் வைத்திருந்த அவரது மொபைல்போனில் இருந்து புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மொபைலை துாக்கி வீசினார். போலீஸ் ஸ்டேஷன் சுற்றுச்சுவரை தாண்டி வெளியே பறந்து விழுந்த மொபைல்போன் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

உடனடியாக மகளிர் போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் மொபைல்போன் முற்றிலும் எரிந்து நாசமானது. அதிலிருந்த சிம்கார்டை மட்டும் எடுத்துக் கொண்ட வாலிபர், விரக்தியுடன் அங்கிருந்து சென்றார்.

வெயில் சுட்டெரிப்பதால் சட்டைப்பையில் வைத்திருந்த மொபைல்போன் சூடாகி தீப்பிடித்து எரிந்திருக்கலாம் என தெரிந்தது. இந்த சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us