தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மொபைல் போன் திருட்டு

மொபைல் போன் திருட்டு

மொபைல் போன் திருட்டு


ADDED : ஏப் 21, 2025 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2025 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் இருந்து மொபைல் போனை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுாரைச் சேர்ந்தவர் பரமசிவம்,42; ஆம்புலன்ஸ் டிரைவர்.

இவர் நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையிலிருந்து, கடலுார் அரசு மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை ஆம்புலன்சில் அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்தார்.

பின், அங்கேயே துாங்கிய அவரிடம் 10,000 ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை மர்ம நபர் திருடிச் சென்றார். புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us