UPDATED : அக் 08, 2026 07:25 PM
ADDED : அக் 08, 2026 06:47 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மத்திய சிறையில் விசாரணை கைதியிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலுார் மத்திய சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக வந்த தகவலின் பேரில், , சிறைக் காவலர்கள் நேற்று முன்தினம் கைதிகள் அறைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் விசாரணை கைதி மணி (எ) எஸ்டேட் மணி என்பவர், காவலர்கள் வருவதை பார்த்ததும் கையில் வைத்திருந்த மொபைல் போனை, மதில் சுவர் வழியாக வெளியே துாக்கி வீசினார். இதையடுத்து அங்க சென்று போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் நேற்று மணி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
