ADDED : ஏப் 02, 2025 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் புதுப்பாளையம் மாடர்ன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 54வது ஆண்டுவிழா ஜோஸ் மகாலில் நடந்தது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் மண்டல தலைவர் சேரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சைமன்ராஜ் முன்னிலை வகித்தார். விஜயா புகழேந்தி, குத்துவிளக்கேற்றினார். பள்ளி தாளாளர் புகழேந்தி வரவேற்றார். தலைமை ஆசிரியர் காயத்ரி பிரகாஷ் ஆண்டறிக்கை வாசித்தார்.
தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் பழனியப்பன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தனியார் பள்ளி தாளாளர்கள் ராஜாராம், கதிர்வேல், பிரதீப் சிங், செந்தில்நாதன் வாழ்த்திப் பேசினர்.
பள்ளிக்கு 100 சதவீதம் வருகை மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள மற்றும் பெற்றோர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படட்னர்.
துணை தலைமையாசிரியர் ஜீவிதா நன்றி கூறினார்.

