/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோடி
/
டிராவல்ஸ் உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோடி
ADDED : நவ 30, 2024 05:08 AM

கடலுார் ; கடலுார் பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் திருவரசன், 43; டிராவல்ஸ் தொழில் செய்து வருகி றார். எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விபரம்.
கடந்த 2013ம் ஆண்டு கடலுாரைச் சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரின் பஸ்சை லீசுக்கு எடுத்து நடத்தினேன்.
அதே பஸ்சை விற்பதாக அவர் கூறியதால், 80லட்ச ரூபாய்க்கு வாங்கிக்கொள்வதாக கூறி அதற்காக 16லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன்.
ஆனால், பஸ் விற்பனையில் இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால் வாங்கிய பணத்தை திருப்பித்தருவதாக 2022ம் ஆண்டு தெரிவித்தார்.
வாங்கிய பணத்தைத் தராததால், 2023 ஜூன் மாதத்தில் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தெரிவித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில் பணத்தை ஜனவரி மாதம் தருவதாக சொன்னவர் தரவில்லை. எனவே எனது பணத்தைப்பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.