ADDED : செப் 18, 2025 11:10 PM

புவனகிரி; புவனகிரி கிழக்கு மண்டல் சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
ஒன்றிய தலைவர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நடராஜன் வரவேற்றார். ஓ.பி.சி., அணி மாநில செயற்குழு தியாகு, ஒன்றிய பொதுச் செயலாளர் பழனியப்பன், நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, ஒன்றிய துணைத் தலைவர் சாந்தலட்சுமி, கந்தசாமி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் திருமாவளவன், பட்டியல் அணி மாநில துணை தலைவர் வெற்றிவேல், மாநில பொதுக்குழு வள்ளி ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்று மற்றும் அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், திருமூர்த்தி, விஜயகுமார், பழனிஜோதி, இளையமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் ஏழுமலை நன்றி கூறினார்.