ADDED : நவ 25, 2025 05:07 AM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி, கடை வீதி ஆத்மநாதர் கோவிலில் சோமவார பூஜைகள் நடந்தன.
குறிஞ்சிப்பாடி, கடை வீதியில் அமைந்துள்ள ஆத்மநாதர் ஆலயத்தில், கார்த்திகை மாதம் இரண்டாவது சோமவார பூஜைகள் நேற்று நடந்தன. குறிஞ்சிப்பாடி வியாபாரிகள், கோவில் நிர்வாகம் சார்பில், சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
