ADDED : ஏப் 19, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்: சலுான் கடைக்காரரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த ராஜசூடாமணி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார், 23; காட்டுமன்னார்கோவிலில் சலூன் கடை வைத்துள்ளார்.
இவரது கடைக்கு நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த பிடாரி தெருவை சேர்ந்த சக்திவேல், 19; கடையில் இருந்த முகசவரம் செய்யும் கத்தியை எடுத்து நவீன்குமார் கழுத்தில் வைத்து மிரட்டி 500 ரூபாய் பறித்து சென்றார்.
இதுகுறித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து, சக்திவேலை கைது செய்தனர்.

