UPDATED : அக் 10, 2026 08:45 PM
ADDED : அக் 10, 2026 08:40 PM

அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: கொத்தட்டையில் சுற்றித் திரிந்த குரங்கை, கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர்.
புதுச்சத்திரம் அடுத்த கொத்தட்டை பகுதியில், கும்பலாக சுற்றித் திரியும் குரங்குகள், வீடுகளில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வந்தது. இது குறித்து பொதுமக்கள் சார்பில், வனத்துறைக்கு குரங்கு பிடிக்க, கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்பேரில், சிம்பரம் வனக் காப்பாளர் அன்புமணி, வனஊழியர் பாண்டிராஜ் ஆகியோர் கூண்டு வைத்து ஆண் குரங்கு ஒன்றை நேற்று பிடித்தனர். பிடிபட்ட குரங்கு வேப்பூர் காப்புக்காட்டில் பத்திரமாக விடப்பட்டது.
