ADDED : ஏப் 24, 2026 10:25 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, குரங்களை பிடித்து காப்புக்காட்டில் விட கோரிக்கை எழுந்துள்ளது.
எருமனுார் ஊராட்சி எ.வடக்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
பகல் நேரங்களில் வீடு, கடைகளில் குரங்குகள் புகுந்து உணவு பொருட்களை நாசம் செய்து வருகின்றன. மேலும், தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
எ.வடக்குப்பத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து காப்பு காட்டில் விட, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
