ADDED : பிப் 15, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பக்தர்கள், பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
விருத்தாசலம் நகரில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு குரங்குகள் பெருக்கமடைந்து குடியிருப்புகளுக்குள் நுழைந்து உணவு பொருட்களை எடுத்து சென்று விடுகிறது. வீட்டின் மாடிகளில் உலரும் துணிகளை நாசம் செய்து வருகிறது. அதுபோல், விருத்தகிரீஸ்வரர், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில்களில் பக்தர்கள் கொண்டு வரும் பிரசாத பொருட்களை பறித்து செல்கின்றன. எனவே, விருத்தாசலத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை கூண்டுகள் வைத்து பிடித்து, பாதுகாப்பாக வனப்பகுதியில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

