ADDED : மே 14, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், 10 க்கும் மேற்பட்ட குரங்குகள், வீடுகளின் உள்ளே சென்று உணவு பொருட்களை, வாரி இறைத்து சேதப்படுத்துகின்றன.
மேலும் சாலையில் செல்பவர்களை கடிக்க பாய்வதால், சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
