UPDATED : மே 13, 2026 07:24 PM
ADDED : மே 13, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தற்போது, 10 க்கும் மேற்பட்ட குரங்குகள், வீடுகளின் உள்ளே சென்று உணவு பொருட்களை, வாரி இறைத்து சேதப்படுத்துகின்றன.
மேலும் சாலையில் செல்பவர்களை கடிக்க பாய்வதால், சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் பயத்துடன் சென்று வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள், குரங்கு அட்டகாசம் அதிகரித்து வருவதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் நலனை கருத்தில்கொண்டு, குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
