ADDED : ஜன 25, 2026 03:45 AM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற னர்.
இப்பகுதியில் தற்போது குரங்குகள், வீடுகளின் உள்ளே சென்று உணவு பொருட்களை, வாரி இறைத்து சேதப்படுத்துகின்றன.
மேலும் சாலையில் செல்பவர்களை கடிக்க பாய்வதால், நடந்து செல்லும் சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் பயத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும் நாளுக்கு நாள், குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வரு வதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
குரங்குகளை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
