ADDED : பிப் 04, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில்: வடமூரில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் வலை வைத்து பிடித்து சென்றனர்.
காட்டுமன்னார்கோயில் தாலுகா குமராட்சி அடுத்த வடமூரில் கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, ஏராளமான குரங்குகள் வந்து வீடுகளில் நுழைந்து பொருள்களை சேதப்படுத்துவதும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்தது.
குரங்குகளை பிடிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் சிதம்பரம் வனத்துறையில் புகார் அளித்தனர்.
அதன் பேரில், வன காப்பாளர்கள் அன்புமணி, ராம்குமார் ஆகியோர் வடமூரில் இரும்பு வலைப் பொருத்திய பெட்டியை வைத்து குரங்களை பிடித்து சென்று காப்புக் காட்டில் விட்டனர்.
