/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருவட்டத்துறையில் 23ல் மாசிமக தேரோட்டம்
/
திருவட்டத்துறையில் 23ல் மாசிமக தேரோட்டம்
ADDED : பிப் 18, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி; திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில், மாசி மக தேரோட்டம் 23ம் தேதி நடக்கிறது.
திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாள் திருஞானசம்பந்தரை, இறைவன் வழங்கிய முத்துச்சிவிகை, முத்துக்குடை, மணிச்சின்னம் கொண்டு அழைத்து வருதலும், மாலை பஞ்சமூர்த்தி வீதியுலாவும் நடந்தது.
மூன்றாம் நாள் உற்சவமான நேற்று இரவு பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது. ஏழாம் நாள் பிச்சாண்டவர் வீதியுலா, எட்டாம் நாள் பரிவேட்டை, 23ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது. 24ம் தேதி மாசி மகம் தீர்த்தவாரி நடக்கிறது.