ADDED : ஏப் 27, 2026 10:25 PM

அ நிறம் | அளவு
திட்டக்குடி:திட்டக்குடியில் திருக்குறள் பேரவை சார்பில் மாதாந்திர சிறப்பு கூட்டம் நடந்தது.
திருக்குறள் பேரவை தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சின்னசாமி, பொருளாளர் அன்பானந்தன் முன்னிலை வகித்தனர். செயலாளர் திரு நாவுக்கரசு வரவேற்றார்.
இதில், 'ஆரோக்கியம்' என்ற தலைப்பில் பேரவை உறுப்பினர் பூவராகவன், 'அன்பின் எல்லை' குறித்து வாழ்நாள் உறுப்பினர் வினோதினி, 'சிதறிய முத்து' குறித்து வாழ்நாள் உறுப்பினர் இந்திராதேவி ஆகியோர் கருத்துரை வழங்கினர். செயற்குழு உறுப்பினர் பெருமாள் நன்றி கூறினார்.
