ADDED : மார் 28, 2025 05:34 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்; வெற்றிலை வியாபாரியின் மொபட்டை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் புதுப்பேட்டையை சேர்ந்தவர் முகமது இக்பால், 60. வெற்றிலை வியாபாரி. கடந்த மாதம் 12ம் தேதி இரவு கடையை மூடிவிட்டு, வீட்டு வாசலில் மொபட்டை நிறுத்திவிட்டு துாங்கச் சென்றார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
