ADDED : ஏப் 26, 2026 09:14 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி: மகள் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த பெத்தநாயக்கன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கணபதி மகள் சிவரஞ்சனி, 19; இவர்,நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நிலையில், திடீரென மாயமானார்.
பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மகள் மாயமானதாக தாய் விஜயா, குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
