ADDED : செப் 29, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
குள்ளஞ்சாவடி, செப்.30-
மகள் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்,.
குள்ளஞ்சாவடி அடுத்த வடக்கு அப்பியம்பேட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் பார்கவி, 19; கடலுாரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். கடந்த 27ம் தேதி இரவு, குடும்பத்தாருடன் தூங்கிய பார்கவி அடுத்த நாள் காலை மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் ஜானகி அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து பார்கவியை ேதடிவருகின்றனர்.
