ADDED : பிப் 01, 2024 06:08 AM

விருத்தாசலம்: தமிழ் பாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊக்க பயிற்சி கூட்டம் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.
சாத்தப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.
டி.இ.ஓ., துரைப்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
அதன்பின், விழுப்புரம் மாவட்ட கருத்தாளர் சரவணன் கலந்துகொண்டு, தமிழ் பாடத்தில் மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண் எடுக்கும் வகையில் பாடம் நடத்தும் முறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
இதில் விருத்தாசலம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 125 அரசு மற்றும் ஆதி திராவிட நலத்துறை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
முடிவில் பள்ளி துணை ஆய்வாளர் சிவாஜி நன்றி கூறினார்.