ADDED : ஜன 04, 2026 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மோட்டார் ஒயர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் வீரபாண்டியன் தெருவை சேர்ந்தவர் சிராஜிதீன் மனைவி ரஷினா, 40; இவர், இந்திரா நகர், அஜீஸ் நகரில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். சமீபகாலமாக கடையில் இருந்து கடப்பாறை உள்ளிட்ட இரும்பு பொருட்கள் திருடுபோனது.
இந்நிலையில், நேற்று மாலை அதே பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர், காந்தி நகர், கலியபெருமாள், 48; என்பதும், 3 ஆயிரம் மதிப்புள்ள 20 மீட்டர் மோட்டார் ஒயரை திருடிச் செல்வது தெரிந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து கலியபெருமாளை கைது செய்தனர்.

