ADDED : ஜன 16, 2026 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம் : சிறுபாலையூர்-மணிக்கொல்லை சாலை பழுதடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
புதுச்சத்திரம் அருகே சிறுபாலையூர்-மணிக்கொல்லை இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு, இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

