/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாலத்தில் தடுப்பு கட்டை வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
பாலத்தில் தடுப்பு கட்டை வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : பிப் 03, 2026 03:02 AM
புதுச்சத்திரம்: வி.பஞ்சங்குப்பம் பக்கிங்காம் கால்வாய் பாலத்தில், பக்கவாட்டு தடுப்பு கட்டைகள் இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
புதுச்சத்திரம் - வி.பஞ்சங்குப்பம் இடையே இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தினசரி போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையின் குறுக்கே செல்லும், பக்கிங்காம் கால்வாய் பாலத்தின் இருபுறமும், பக்கவாட்டு தடுப்பு கட்டைகள் இல்லை.
இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி கால்வாய் பாலத்தில், பக்கவாட்டு தடுப்பு கட்டைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

