/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணாடத்தில் சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
பெண்ணாடத்தில் சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
பெண்ணாடத்தில் சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
பெண்ணாடத்தில் சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : ஜன 18, 2025 02:04 AM
பெண்ணாடம்: பெண்ணாடம் கடைவீதியில் போக்குவரத்து பாதிப்பை சரி செய்ய சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் பெண்ணாடத்தில் அரசு, தனியார் பள்ளிகள், பேரூராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், வங்கிகள், அரசு, தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள் உள்ளதால் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் அரியலுார் மாவட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு வந்து செல்வதால் பஸ் நிலையம், கடைவீதி பகுதியில் பொது மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
கடை வீதிக்கு வருவோர் வாகனங்களை சாலையில் நிறுத்திச் செல்வதுடன், தள்ளுவண்டி வியாபாரிகளும் வண்டியை சாலையில் நிறுத்துகின்றனர். இதனால் இரு சக்கரவாகனம் முதல் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கின்றது. மேலும் விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
விபத்தை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் வணிகர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், எவ்வித நடவடிக்கை இல்லை.
எனவே, பெண்ணாடம் கடைவீதியில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்க சென்டர் மீடியன் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.