/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி.கே.டி., சாலையில் 'டிராபிக் ஜாம்' வாகன ஓட்டிகள் 3 மணி நேரம் அவதி
/
வி.கே.டி., சாலையில் 'டிராபிக் ஜாம்' வாகன ஓட்டிகள் 3 மணி நேரம் அவதி
வி.கே.டி., சாலையில் 'டிராபிக் ஜாம்' வாகன ஓட்டிகள் 3 மணி நேரம் அவதி
வி.கே.டி., சாலையில் 'டிராபிக் ஜாம்' வாகன ஓட்டிகள் 3 மணி நேரம் அவதி
ADDED : ஜன 29, 2025 06:26 AM
பண்ருட்டி :   பண்ருட்டியில் வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகரிப்பால் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.
விக்கிரவாண்டி டோல்கேட் வழியாக திருச்சி மார்க்கம் செல்லும் வாகனங்கள் அனைத்தும், தமிழக முதல்வர் விழுப்புரத்தில் நடந்த ரோடு ஷோ காரணமாக திருப்பி விடப்பட்டன.
இதனால் காலை 8:00 மணி முதல் வி.கே.டி. தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகரிப்பால் டிராபிக் ஜாம் ஆனது. பண்ருட்டி-மடப்பட்டு, பண்ருட்டி- அரசூர் சாலை வழியாகவும் பண்ருட்டி நகரத்திற்கு வாகனங்கள் அதிகளவில் வந்ததால் பண்ருட்டி நகரத்தில் அனைத்து சாலையிலும் நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் பலர் விழுப்புரம் முதல்வர் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு சென்றதால், வாகன போக்குவரத்தை சீரமைக்க போலீசார் இல்லை. தகவலறிந்த போலீசார் 10:00 மணிக்கு பிறகு வந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 11:00 மணிக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது.