/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்துகள் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அச்சம்
/
விபத்துகள் அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : செப் 28, 2024 06:53 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் பகுதியில் ஓட்டுநர் உரிமம் இல்லாமால் பைக் ஓட்டுபவர்களால் சாலையில் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பாதவர்கள் சாலையில் ஓட்டுநர் உரிமம் இன்றி பைக் ஒட்டி செல்கின்றனர். சாலை விதிகளை மதிக்கமால் சாலையில் தாறுமாறாக செல்வதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மாணவர்கள் பைக்கில் சாகசம் மேற்கொண்டு, சைலன்ஸ்ரில் அதிக சத்துத்துடன் சென்று அடிக்கடி வாகன விபத்துக்களில் சிக்குகின்றனர்.
கடலுார்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில், தினந்தோறும் வாகன விபத்துகள் தொடர்கதையாக நடப்பதால் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார், ஓட்டுநர் உரிமம் இன்றி பைக் ஓட்டுபவர்கள் மற்றும் அதிவேகமாக செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.