/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதையில் 'வந்தே பாரத்' ரயில்கள் நிற்க பார்லி.,யில் எம்.பி., கோரிக்கை
/
விருதையில் 'வந்தே பாரத்' ரயில்கள் நிற்க பார்லி.,யில் எம்.பி., கோரிக்கை
விருதையில் 'வந்தே பாரத்' ரயில்கள் நிற்க பார்லி.,யில் எம்.பி., கோரிக்கை
விருதையில் 'வந்தே பாரத்' ரயில்கள் நிற்க பார்லி.,யில் எம்.பி., கோரிக்கை
ADDED : டிச 05, 2025 05:24 AM

விருத்தாசலம்: சென்னை - நெல்லை, நாகர்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில்கள், விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் நின்று செல்ல வேண்டும் என கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் பார்லி., கூட்டத்தொடரில் நேற்று கோரிக்கை வைத்துள்ளார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி துவங்கி வரும் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தொடரில், கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் பேசியதாவது:
கடலுார் மாவட்டத்தில், முக்கிய ரயில்வே ஜங்ஷனாக விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது.
இந்த வழியாக சென்னை - திருநெல்வேலி; சென்னை - நாகர் கோவில் வரை, 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. நாகர்கோவில், கோவில்பட்டி, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி ஆகிய 6 ரயில்வே ஸ்டேஷன்களில் 'வந்தே பாரத்' ரயில்கள் நிறுத்தப்படுகிறது .
ஆனால், சென்னையில் இருந்து திருச்சிவரை, விழுப்புரம் ரயில் நிலையத்தில் மட்டும் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்படுகிறது.
ரயில் பாதை, ரயில்வே ஜங்ஷன் அமைக்க பொதுமக்கள் அனைவரும் நிலம் வழங்கியுள்ளனர். ஆனால், ஒரு பகுதியினருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. எனவே, விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்தே பாரத் ரயில் விருத்தாசலம் ஜங்ஷனில் நின்று சென்றால், கடலுார் மாவட்ட மக்கள் பயனடைவர்.இவ்வாறு அவர் பேசினார்.

