தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி நினைவு தின பொதுக்கூட்டம்

எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி நினைவு தின பொதுக்கூட்டம்

எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி நினைவு தின பொதுக்கூட்டம்


UPDATED : நவ 12, 2026 04:30 PM

ADDED : நவ 12, 2026 04:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 04:30 PM ADDED : நவ 12, 2026 04:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பன்னீர்செல்வத்தின் தந்தையும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான கிருஷ்ணமூர்த்தியின் 37ம் ஆண்டு நினைவு தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நாள் பேரணி மற்றும் பொது கூட்டம் காட்டுமன்னார்கோவிலில் நடந்தது.

அதனையொட்டி, மோவூர் கலுங்கில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு பன்னீர்செல்வம் தலைமையில், செழியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட தி.மு.க.,வினர் 7 கி.மீ., துாரம் ஊர்வலமாக காட்டுமன்னார்கோவில் செட்டி தெரு பொதுக்கூட்ட மேடைக்கு சென்றடைந்தனர்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கணேசமூர்த்தி வரவேற்றார். எம்.ஆர்.கே., அறக்கட்டளை தாளாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயபாண்டியன், ஆனந்தன், ஓய்வு பெற்ற ஆசிரியர் தருமர்பழனிசாமி முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செழியன், கொள்கை பரப்பு துணை செயலாளர் புகழேந்தி, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாவட்ட பொருளாளர் கதிரவன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம், ஆடுதுறை உத்திராபதி பேசினர்.

குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், கவுன்சிலர்கள் ஜேம்ஸ், அப்புசந்திரசேகர், பால மணிகண்டன், வி.சி.க., மாவட்ட செயலாளர் மணவாளன், மாவட்ட பிரதிநிதிகள் உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எம்.ஆர்.கே., நற்பணி மன்ற தலைவர் ராஜசேகர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us