/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே. கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
/
எம்.ஆர்.கே. கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம்
ADDED : ஜன 07, 2024 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே. பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
டாய்கின் ஏர் கண்டிஷனிங் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி டேவிட் , நேர்காணல் நடத்தி, தகுதியான மாணவர்களை தேர்வு செய்தார். முகாமில், இ.சி.இ.,-இ.இ.இ.,-எம்.இ.சி.ெஹச் துறை மாணவர்கள் 60 பேர் கலந்து கொண்டனர். இதில் 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தேர்வான மாணவர்களுக்கு கல்லுாரி சேர்மன் கதிரவன் வாழ்த்து தெரிவித்தார்.
கல்லுாரி முதல்வர் ஆனந்தவேலு உடனிருந்தார்.