/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அண்ணாமலை பல்கலையுடன் ஒப்பந்தம்

ADDED : அக் 18, 2024 11:15 PM

சிதம்பரம்: சிதம்பரம்அண்ணாமலை பல்கலை., மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இதன் மூலம்,கடல் அறிவியல், வேளாண்மை மற்றும் பல்கலையில் உள்ள இதர துறைகளுடன் இணைந்து, உயர் ஆராய்ச்சி செய்தல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திறன் மேம்பாடு, மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் கடலோர மாவட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு பணிகளை இணைந்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்கலை., துணை வேந்தர் கதிரேசன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் சவுமியா சுவாமிநாதன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.
நிகழ்வில், பல்கலை பதிவாளர் பிரகாஷ், புரிந்துணர்வு ஒப்பந்த மைய ஒருங்கிணைப்பாளர் கருப்பையா, பல்கலைக்கழக உள்தர மதிப்பீட்டு மைய துணை இயக்குனர் ரமேஷ்குமார், கடல் அறிவியல் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் வேல்விழி, மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.