ADDED : ஏப் 11, 2025 05:52 AM

கடலுார்: கடலுாரில் மா.கம்யூ., கட்சி சார்பில் காஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர் குழு உறுப்பினர் மனோரஞ்சிதம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆளவந்தார் பக்கீரான் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு சமையல் காஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலையை உயர்த்தியதை கண்டித்து கோஷம் எழுப்பினர். காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து சூடம் ஏற்றி காண்பித்தனர்.
முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாவட்ட செயலாளர் பால்கி, நிர்வாகிகள் மருதவாணன், ஸ்டாலின் திருமுருகன், தேவநாதன், பூபதி, கருணாகரன் பங்கேற்றனர். மாநகர செயலாளர் அமர்நாத் நன்றி கூறினார்.
திட்டக்குடி
திட்டக்குடியில் மா.கம்யூ., வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். நிர்வாகி பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், பொது மக்கள் பயன்படுத்தும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பேசினர்.
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே விறகு வைத்து சமைக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் தேன்மொழி தலைமை தாங்கினார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், பிரகாஷ் பேசினர். வட்ட குழு உறுப்பினர்கள் இளங்கோவன், மணிகண்டன், தனபால் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.