ADDED : ஏப் 18, 2025 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு அம்சாயாள், ஜெயசீலன், கற்பனைச்செல்வம் முன்னிலை வகித்தனர்.
மாநிலக்குழு ரமேஷ்பாபு, மாவட்டக்குழு வாஞ்சிநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆழ்வார் கண்டன உரையாற்றினர்.
தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், முன்னாள் தி.மு.க., நகர செயலாளர் முனவர் உசேன், கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி வேல்முருகன், அருள்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வக்ப் திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அசன் முகமது மன்சூர் நன்றி கூறினார்.

