ADDED : செப் 18, 2025 03:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகர மா. கம்யூ., சார்பில் மயிலாடுதுறை ஒன்றிய துணைத்தலைவர் வைரமுத்து படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட குழு ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார். ஆணவ படுகொலை செய்தவர்களை கைது செய்து கடுமையான தண்டனை பெற்று தர வேண்டுமென வலியுறுத்தினர்.
பகுதி செயலாளர் ஸ்டீபன்ராஜ், சுப்ரமணியன், தர்மேந்திரன், சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.