/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதிய குடிநீர் டேங்க் மா.கம்யூ., கோரிக்கை
/
புதிய குடிநீர் டேங்க் மா.கம்யூ., கோரிக்கை
ADDED : ஜன 02, 2025 06:58 AM
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே நீர்தேக்க தொட்டி அமைத்தரக்கோரி, மா.கம்யூ., கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மா.கம்யூ., மாநிலக் குழு ரமேஷ்பாபு தலைமையில் நிர்வாகிகள், பரங்கிப்பேட்டை துணை பி.டி.ஓ., நித்யாவிடம் அளித்த கோரிக்கை மனு:
பரங்கிப்பேட்டை ஒன்றியம் கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள நீர்தேக்க தொட்டி பழுதடைந்துள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அங்கு புதியதாக நீர்தேக்க தொட்டி கட்டித்தரவும், சி.கொத்தங்குடி ஊராட்சி அய்யன் திருவள்ளூவர் நகரில் சேதமடைந்துள்ள சாலையை புதுப்பித்துத்தர வேண்டும். மேலும், அங்கு பைப் லைன் மூலம் வரும் குடிநீர், செம்மண் கலந்து வருவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

