/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் மா.கம்யூ., நகர மாநாடு
/
நெய்வேலியில் மா.கம்யூ., நகர மாநாடு
ADDED : அக் 22, 2024 06:25 AM

நெய்வேலி: நெய்வேலியில் மா.கம்யூ., நகர மாநாடு நடந்தது.
நெய்வேலி வட்டம் 24ல் உள்ள சி.ஐ.டி.யூ., வளாகத்தில் நடந்த மாநாட்டில், நகர குழு உறுப்பினர் அன்பழகன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். நகர குழு உறுப்பினர்கள் புண்ணியமூர்த்தி, குமார், நெய்வேலி நகர செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். மத்திய குழு உறுப்பினர் வாசுகி மாநாட்டின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன் மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன், செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநாட்டில் வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும். என்.எல்.சி.,யில் காலியாக உள்ள பணியிடங்களில், வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர், வாரிசுகள், இறந்தோர் வாரிசு, அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தோர் உள்ளிட்டோரை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.