/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாருக்கு வரும் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு மாநகர தி.மு.க., தீர்மானம்

ADDED : நவ 16, 2024 02:42 AM

கடலுார்: கடலுார் மாநகருக்கு வரும் 24, 25ம் தேதிகளில் வருகை தரும் துணை முதல்வர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலுார் மாநகர தி.மு.க., சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நேற்று மாலை கட்சி அலுவலகத்தில் நடந்தது. அவைத்ததலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். கடலுார் தொகுதி பொறுப்பாளர் சேதுநாதன், எம்.எல்.ஏ., அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மேயர் சுந்தரி ராஜா, மாநகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வரும் 16, 17, 23, மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடக்கும் வாக்காளர் சிறப்பு முகாமில், நிர்வாகிகள், அனைவரும் திருத்தம் பணியில் ஈடுபட வேண்டும்.
கடலுார் நகருக்கு வரும் 24, மற்றும் 25ம் தேதிகளில் நடக்கவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் துணை முதல்வர் உதயநிதிக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது. தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.