/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காந்தி நினைவு நாளை மறந்த நகராட்சி அதிகாரிகள்
/
காந்தி நினைவு நாளை மறந்த நகராட்சி அதிகாரிகள்
ADDED : ஜன 31, 2025 07:59 AM

நெல்லிக்குப்பம்; காந்தி நினைவு நாளை நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகள் மறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி வளாகத்தில் காந்தி சிலையுடன் கூடிய மண்டபம் உள்ளது. அவரது சிலைக்கு, அவரது பிறந்த நாள், நினைவு நாள், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற நாட்களில் மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கும்.
காந்தியின் நினைவு நாளான நேற்று அவரது சிலைக்கு நகராட்சி அதிகாரிகள் மாலை அணிவிக்காததோடு, கடந்த வாரம் நடந்த குடியரசு தினவிழால் அணிவித்த மாலையை கூட அகற்றாமல் இருந்ததோடு, இந்த சிலை முன் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நின்று நேற்று தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றது, நகராட்சி அதிகாரிகளின் மெத்தனத்தை வௌிச்சம் போட்டு காட்டியுள்ளது.