/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது
/
நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடந்தது
ADDED : பிப் 11, 2024 10:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க கிளைக் கூட்டம் தலைவர் ஜெயராமன் தலைமையில் நடந்தது.
துணைத்தலைவர் ஆதிநாராயணன் முன்னிலை வகித்தார். செயலாளர் தேவனாதன், பொருளாளர் இளங்கோவன், அப்துல்மத்தீன்,கவுரவ தலைவர் அப்துல் அமீது நடராஜன், நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு மூலம் கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் உரிமை தொகைகளை பெற்று தர உதவுவது, ஓய்வூதியர்கள் பிரச்னைகளை சங்கம் மூலம் தீர்த்து வைப்பது, ஓய்வூதியர் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம், தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.