ADDED : செப் 28, 2026 09:51 PM
காட்டுமன்னார்கோவில், செப். 29–
டாஸ்மாக் கடையில் தகராறு செய்து, சேல்ஸ்மேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பு, கக்கன்நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் தொட்டி (எ) மணிகண்டன்,35; ரவுடியான இவர் நேற்று முன்தினம் காட்டுமன்னார்கோவில் டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கிருந்த சேல்ஸ்மேன் ராஜாவிடம், ரூ.150 கொடுத்து மது பாட்டில் வாங்கினார். பின்னர் நான் ரூ.500 கொடுத்தேன், பாக்கி பணம் கொடு என கேட்டு தகராறு செய்தார்.
அப்போது மணிகண்டன், உள்ளூர் ரவுடியான என்னிடமே வேலையை போட்டு காண்பிக்கிறாயா, இனிமேல் தினம் எனக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என கூறி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
