தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொலை மிரட்டல் 3 பேர் கைது 

கொலை மிரட்டல் 3 பேர் கைது 

கொலை மிரட்டல் 3 பேர் கைது 


ADDED : ஆக 24, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 09:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

கடலுார், குண்டுசாலையைச் சேர்ந்தவர் பலராமன் மகன் மனோபாலன்,25; இவர், தனது வீட்டின் எதிரில் அதே பகுதியைச் சேர்ந்த உமாபதி,36; மணிகண்டன், கலைமணி மகன் தினேஷ்குமார்,26; சங்கர் மகன் சரவணன்,27; ஆகியோருடன் விநாயகர் சதுர்த்தி விழா சம்பந்தமாக நேற்று முன்தினம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மனோபாலன், தனியாக விநாயகர் சிலை வைக்க போவதாக கூறினார். இதற்கு உமாபதி உள்ளிட்ட 4 பேர் எதிர்ப்பு தெரிவித்து, மனோபாலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து உமாபதி, தினேஷ்குமார், சரவணன் ஆகியோரை கைது செய்து, மணிகண்டனை தேடி வருகின்றனர். 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us