/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சப் கலெக்டரிடம் இஸ்லாமியர் புகார்
/
சப் கலெக்டரிடம் இஸ்லாமியர் புகார்
ADDED : செப் 22, 2024 02:21 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், குடியிருந்து வரும் இடத்தை காலி செய்ய கூறுவதாக, சப் கலெக்டரிடம் இஸ்லாமியர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.
சிதம்பரம் வண்ட கேட்அருகே பள்ளிப்படை குட்ட பக்ரி தர்கா பகுதியில் வசிக்கும் நுாற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை சப் கலெக்டர் அலுவலகம் வந்து, மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் சாகுல் தலைமையில் மனு அளித்தனர்.
அந்த மனுவில், சிதம்பரம் வண்டி கேட் அருகே பள்ளிப்படை பகுதியில் குட்ட பக்ரி தர்கா உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
இடத்திற்கு வரியும் கட்டி வருகிறோம். இந்நிலையில், வீடுகளை காலி செய்ய சொல்லி எங்களிடம்கடிதம் கொடுக்கின்றனர். பல ஆண்டுகளாக வசித்து வரும் எங்களை காலி செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, தாசில்தார் ஹேமா ஆனந்தியை சந்தித்து மனு கொடுத்துவிட்டு சென்றனர்.