/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊராட்சிகளை மேம்படுத்துவதே எனது லட்சியம்: மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உறுதி
/
ஊராட்சிகளை மேம்படுத்துவதே எனது லட்சியம்: மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உறுதி
ஊராட்சிகளை மேம்படுத்துவதே எனது லட்சியம்: மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உறுதி
ஊராட்சிகளை மேம்படுத்துவதே எனது லட்சியம்: மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உறுதி
ADDED : ஜன 20, 2024 06:07 AM

நல்லுார் ஒன்றிய ஊராட்சிகளின் மேம்பாட்டிற்காக பாடுபடுவதே எனது 'லட்சியம்' என அ.தி.மு.க., மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சவுந்திரசோழபுரம் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடலுார் மாவட்டம், நல்லுார் ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வார்டு எண் - 18ல் சவுந்திரசோழபுரம் ஊராட்சி, வெண்கரும்பூர், காரையூர், பெ.பூவனுார், முருகன்குடி, கிளிமங்கலம், துறையூர், கொசப்பள்ளம், மாளிகைக்கோட்டம், பெ.பொன்னேரி, இறையூர், மேலுார், கோவிலுார், சிறுமங்கலம், தொளார், கூடலுார், சிறுமங்கலம் உட்பட 34 ஊராட்சிகள் 16 துணை கிராமங்கள் உள்ளன.
நான்கு ஆண்டுகளில் இந்த ஊராட்சிகள் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டிற்காக மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு, கை பம்புகள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, தார் சாலை, பேவர் பிளாக் சாலை, வடிகால் வாய்க்கால், சிறுபாலம், அரசு பள்ளிகளுக்கு கழிவறை, சுற்றுச்சுவர் மற்றும் மாணவர்கள் அமருவதற்கு வசதியாக பெஞ்ச், டெஸ்க், ைஹமாஸ் விளக்குகள், அங்கன்வாடி மையம் புனரமைப்பு, சத்துணவு சமையல் கூடம் பழுது நீக்கம், அரசு பள்ளி கழிவறை புனரமைப்பு, திறந்தவெளி கிணறு ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநில நிதிக்குழுவின் நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வளர்ச்சி திட்டப்பணிகள் தொடரும்.
நல்லுார் ஒன்றியம், 18வது வார்டுக்குட்பட்ட ஊராட்சிகள் மற்றும் துணை கிராமங்களை மேம்படுத்தி, தன்னிறைவு பெற வைப்பதே எனது 'லட்சியம்' என மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.