
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல் வயிலில் உள்ள வாய்க்காலில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
நெல்லிக்குப்பம்-வான்பாக்கம் கஸ்டம்ஸ் சாலை அருகே பச்சையப்பன் என்பவர் தனது நெல் வயலில் அதிகபடியான தண்ணீரை வெளியேற்ற வாய்க்கால் வைத்துள்ளார். வாய்க்காலில் மூழ்கி நேற்று மாலை ஒருவர் இறந்து கிடப்பதாக நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்தவர் வான்பாக்கத்தை சேர்ந்த பஞ்சாட்சரம்,60; எனத் தெரிந்தது. குடிபோதையில் வாய்க்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

