/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தை சாவில் மர்மம் உடல் தோண்டியெடுப்பு
/
குழந்தை சாவில் மர்மம் உடல் தோண்டியெடுப்பு
ADDED : ஆக 24, 2025 12:37 AM

பண்ருட்டி:போலீசுக்கு தெரியாமல் புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ், 30; அதே பகுதியை சேர்ந்த வினோலியா, 25, என்பவருடன் வசித்தார். இவர்களுக்கு, பிறந்த 2 வயது ஆண் குழந்தையை, சுபாஷ் சந்திரபோஸிடம் மீட்டு தரக்கோரியும் சென்னை ஐகோர்ட்டில் வினோலியா மனு தாக்கல் செய்தார்.
காடாம்புலியூர் போலீசார் விசாரித்ததில், வினோலியாவிற்கு, ஜூன் 4ல் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்து இறந்ததும், உடலை உறவினர்கள் அடக்கம் செய்ததும் தெரிந்தது.
பால் குடித்த போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என, பிரேத பரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
எஸ்.பி., ஜெயக்குமார், தாசில்தார் பிரகாஷ், டி.எஸ்.பி., ராஜா முன்னிலையில், சாத்திப்பட்டு சுடுகாட்டில், நேற்று குழந்தை உடல் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது.