/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தமிழில் பெயர் பலகை ஆலோசனைக் கூட்டம்
/
தமிழில் பெயர் பலகை ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஏப் 15, 2025 06:29 AM
மந்தாரக்குப்பம்; கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபாரதம் விதிக்கப்படும் என கலெக்டர் ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதனை கெங்கைகொண்டான் பேரூராட்சி யில் நடைமுறைபடுவதற்காக வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வர்த்தக சங்க நிர்வாகிகள் பாபு, சங்கர், ரவீந்திரன், ராஜாசிங், உட்பட பலர் பங்கேற்றனர்.
வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பதாக வர்த்தக சங்க நிர்வாகிகள் உறுதியளித்தனர்.